OUR CLIENTS
FSFW அமைப்புடன் தொடர்பிருக்க கூடாதுமத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்
FSFW அமைப்புடன் தொடர்பிருக்க கூடாதுமத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் Posted on 02-Jul-2019 FSFW அமைப்புடன் தொடர்பிருக்க கூடாதுமத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்


புதுடெல்லி, ஜூலை 2-
உலகின் மிகப்பெரிய புகையிலை நிறுவனமான பிலிப் மோரிஸிடமிருந்து நிதி பெறுவதாக கூறப்படும், புகையிலை எதிர்ப்பு அமைப்புடன் எவ்வித தொடர்பும் இருக்கக் கூடாது என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புகையில்லா உலகம் எனப்படும் திஷிதிகீ என்ற அமைப்பு, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மாற்றுகள் மூலம் புகைப்பழக்கம், சிகரெட் பயன்பாடு ஆகியவற்றை, குறைப்பதாக கூறி தொடங்கப்பட்டது. 

தன்னிச்சையாக இயங்குவதாக கூறப்படும் இந்த அமைப்பு, மிகப்பெரிய புகையிலை நிறுவனமான பிலிப் மோரிசிடம் ஆண்டுதோறும் சுமார் 551 கோடி ரூபாய் அளவுக்கு நிதி பெறுவதாக கூறப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாக கூறப்படும், இதே குற்றச்சாட்டை முன்னிறுத்தி 3 புகையிலை எதிர்ப்பு அமைப்புகளும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தன. இந்நிலையில் இந்த அமைப்புடன் எவ்வித தொடர்பும் இருக்க கூடாது என, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

பிலிப் மோரிஸ் நிறுவனம் இந்தியாவில் தனது இ-சிகரெட் சாதனத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Label