OUR CLIENTS
மக்கள் குறைதீர் கூட்டத்தில் செல்போனில் மூழ்கிக் கிடந்த அதிகாரிகள்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் செல்போனில் மூழ்கிக் கிடந்த அதிகாரிகள் Posted on 02-Jul-2019 மக்கள் குறைதீர் கூட்டத்தில் செல்போனில் மூழ்கிக்  கிடந்த அதிகாரிகள்


கடலூர், ஜூலை 2
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்கும் நிகழ்வின் போது அதிகாரிகள் செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்ததாக புகார் எழுந்துள்ளது. 

வாரந்தோறும் திங்கட்கிழமையில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தின்போது மக்கள் தங்கள் குறைகளை மனுக் களாக எழுதி வந்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவார்கள். அந்த மனுக்களை கூட்டத்தில் கலந்துகொள்ளும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் வழங்கி தீர்வுகாணச் சொல்வது வழக்கம்.

அந்த வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வந்திருந்த அதிகாரிகள், தங்களது செல்போனில் சமூக வலைதளங்களில் உலவிக் கொண்டிருந்ததாக புகார் எழுந்துள்ளது.  

இதேபோல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் அதிகாரிகள் தங்களை மறந்து செல்போனில் மூழ்கிக் கிடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

Label