OUR CLIENTS
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்&எம்.ஆர்.விஜயபாஸ்கர்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்&எம்.ஆர்.விஜயபாஸ்கர் Posted on 02-Jul-2019 போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்&எம்.ஆர்.விஜயபாஸ்கர்


சென்னை, ஜூலை 2-
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சென்னையில் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்க வில்லை. 

இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்த முடியவில்லை. ஊதியம் வழங்கப்படும். ஊதியம் வழங்க ஒருநாள் கால தாமதம் ஆவதால் போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமாகாது. 

அதேபோன்று போக்கு வரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு எதுவும் கிடையாது, தேவையில்லாமல் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். வழக்கம்போல முழுத் தொகையும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப கோரிக்கை விடுத்துள்ளோம். பெரும் பாலான போக்கு வரத்துத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பிவிட்டனர் என்று கூறினார்.

Label