OUR CLIENTS
கழுதைகள் போல் ஒலியெழுப்பி பரிசு பெற்ற எஜமானர்கள்
கழுதைகள் போல் ஒலியெழுப்பி பரிசு பெற்ற எஜமானர்கள் Posted on 02-Jul-2019 கழுதைகள் போல் ஒலியெழுப்பி  பரிசு பெற்ற எஜமானர்கள்


கொலம்பியா, ஜூலை 2-
கொலம்பியாவில் நடைபெற்ற கழுதைகளுக்கான வினோத திருவிழாவில், கழுதைகள் போல மிகச்சிறப்பாக ஒலி எழுப்பிய அதன் எஜமானர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

கொலம்பியாவின் மோனிக்யூரா பகுதியில் நடைபெற்ற இந்த திருவிழாவில், ஏராளமான கழுதைகள் பங்கேற்று ஊர்வலமாக வந்தன. தொப்பிகள், காலுறைகள், இறகுகள் என கழுதைகளை அதன் எஜமானர்கள் விதவிதமாக அலங்கரித்திருந்தனர். இதையடுத்து கழுதைகளை போலவே ஒலியெழுப்பி, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விவசாயிகளின் அன்றாடப் பணிகளில் உதவும் கழுதைகளை கௌரவிக்கும் வகையில், இந்த திருவிழா நடத்தப்படுவதாக மோனிக்யூரா நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

Label