OUR CLIENTS
அமெரிக்காவுக்கு தைவான் அதிபர் பயணம்
அமெரிக்காவுக்கு தைவான் அதிபர் பயணம் Posted on 02-Jul-2019 அமெரிக்காவுக்கு தைவான் அதிபர் பயணம்


புதுடெல்லி, ஜூலை 2-
தைவான் அதிபரின் அமெரிக்க பயணம் சீனாவின் கோபத்தைத் தூண்டும் வகையில் அமையும் என கூறப்படுகிறது.

தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வரும் நிலையில், தைவான் தன்னாட்சியுடன் விளங்குவதாகக் கூறி வருகிறது. அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுடன் நேரடியாக தைவான் அரசு ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்துவதும், தென் சீனக் கடல் விவகாரத்தில் அவ்வப்போது சீனாவின் கோபத்தை தூண்டி வருகிறது. அமெரிக்கா தைவானுக்கு ஆயுத விற்பனை செய்வதையும் சீனா எதிர்த்து வருகிறது. இந்நிலையில், நட்பு நாடு களுடனான பேச்சு வார்த்தைக்கு தைவான் அதிபர் ட்சை இங் வென் பயணிக்கும்போது அமெரிக்காவில் 4 நாட்கள் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இது சீனாவுக்கு மேலும் கோபத்தை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

Label