OUR CLIENTS
கத்தியால் குத்தப்பட்டு கர்ப்பிணி பெண் மரணம்
கத்தியால் குத்தப்பட்டு கர்ப்பிணி பெண் மரணம் Posted on 02-Jul-2019 கத்தியால் குத்தப்பட்டு கர்ப்பிணி பெண் மரணம்


லண்டன், ஜூலை 2-
லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சம்பவ இடத்திலேயே குழந்தை பிறந்தது.

தெற்கு லண்டனில் இருக்கும் க்ராய்டன் பகுதியில் 8 மாத கர்ப்பிணி பெண் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல் வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு லண்டன் நகர போலீசார் மற்றும் மருத்துவர்கள் சென்றுள்ளனர்.

அங்கு கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கெல்லி மேரி என்ற அந்த பெண்ணை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் கெல்லி மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு அங்கேயே மருத்துவர்கள் பிரசவம் பார்த்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். இதையடுத்து ஆபத்தான நிலையில் உள்ள அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Label