OUR CLIENTS
ஏசிஎஸ் கல்வி குழுமத்தின் இலவச மருத்துவ முகாம்!
ஏசிஎஸ் கல்வி குழுமத்தின் இலவச மருத்துவ முகாம்! Posted on 02-Jul-2019 ஏசிஎஸ் கல்வி குழுமத்தின்  இலவச மருத்துவ முகாம்!


வேலூர், ஜூலை 2-
வேலூர் கஸ்பா எஸ்கேஎம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

ஏசிஎஸ் கல்வி குழுமத்தின் சார்பில் இந்த இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஏசிஎஸ் குழும கல்லூரிகளின் சார்பில் சென்னையில் இயங்கிவரும் ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் பெங்களூருவில் இயஙகி வரும் ராஜராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவக் குழுக்கள் சார்பில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறியல் மருத்துவம்,குழந்தை மருத்துவம்,எலும்பு மருத்துவம், தோல் மருத்துவம், காசநோய் மற்றும் சுவாச மருத்துவம், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவம், கண் மருத்துவம், இதய மருத்துவம், பல் மருத்துவம், நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவம் ஆகிய சிகிச்சைகளுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடந்து முடிந்த நிலையில் வேலூர் கஸ்பா எஸ்கேஎம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமை ஏ.சி.சண்முகம் தொடங்கி வைத்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் மற்றும் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை பெற்றனர்.  

இதைத் தொடர்ந்து வரும் 6ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வளத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 

Label