OUR CLIENTS
பெரியாப்பள்ளி ரோட்டில் குவியும் குப்பை!
பெரியாப்பள்ளி ரோட்டில் குவியும் குப்பை! Posted on 02-Jul-2019 பெரியாப்பள்ளி ரோட்டில் குவியும் குப்பை!


கன்னியாகுமரி, ஜூலை 2-
திங்கள்சந்தையில் இருந்து பெத்தேல்புரம் செல்லும் பெரியாப்பள்ளி சாலை மிக முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக பெத்தேல்புரம், மேற்கு நெய்யூர், செம்பொன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த சாலையில் அரசு போக்குவரத்து கழக டெப்போவின் பின்புறம் சாலையோரம் குப்பை கொட்டுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.  தினமும் ஏராளமான பொதுமக்களும், 100க்கும் மேற்பட்ட வாகனங்களும் செல்லும் இந்த சாலையில் குப்பை குவிந்து கிடந்து சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு வழிகளில் கோரிக்கை விடுத்தும் இதுவரை அகற்றவில்லை. எனவே திங்கள்சந்தை பெரியாபள்ளி ரோட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பின் அந்த இடத்தில் கிருமி நாசினி தெளித்து நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label