OUR CLIENTS
தமிழ்நாட்டில் பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டடம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழ்நாட்டில் பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டடம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் Posted on 02-Jul-2019 தமிழ்நாட்டில் பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டடம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


சென்னை, ஜூலை 2-
தமிழ்நாட்டில் இந்த கல்வி ஆண்டில் 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு அளிக்கும் திட்ட உதவியைக் கொண்டு பல்வேறு பள்ளிக் கூடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப் படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் சட்டப் பேரவையில் நேற்று தெரி வித்துள்ளார். கலசபாக்கம் தொகுதி லாடவரம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தரப்படுமா என உறுப்பினர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். உறுப்பினரின் பெயரில் பன்னீரோடு சேர்த்து செல்வமும் உள்ளதால், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட லாடவரம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை பள்ளிக்கு இந்த ஆண்டே நபார்டு திட்டத்தின் கீழ் கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதேபோல் பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப் பட்டும் புதிய கட்டிடம் கட்டித்தரப் படாத நிலை உள்ளதாக திமுக உறுப்பினர் பிச்சாண்டி கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங் கோட்டையன், பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு வருவாய் துறை மூலம் தான் நிலம் ஒதுக்கப்பட வேண்டும், அவ்வாறு நிலம் ஒதுக்கீடு செய்தாலும், கட்டிடம் கட்டுவதற்கான நிதி கிடைக்காத நிலை உள்ளது என்றும் செங்கோட்டையன் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து முதல்வர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சரிடம் கலந்து பேசி, ஒதுக்கப்பட்ட நிலங்களில் பள்ளிக்கூட கட்டிடம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Label