OUR CLIENTS
கால்நடைகளுக்கான தீவனங்களை நியாயவிலை கடைகள் மூலம் வழங்க சாத்தியமில்லை உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
கால்நடைகளுக்கான தீவனங்களை நியாயவிலை கடைகள் மூலம் வழங்க சாத்தியமில்லை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் Posted on 02-Jul-2019 கால்நடைகளுக்கான தீவனங்களை நியாயவிலை கடைகள் மூலம் வழங்க சாத்தியமில்லை உணவுத்துறை அமைச்சர் காமராஜ்


சென்னை, ஜூலை 2-
கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை நியாயவிலை கடைகள் மூலம் வழங்க சாத்தியமில்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, நியாய விலைக்கடைகள் மூலம் கால்நடைகளுக்கான தீவனங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என திமுக உறுப்பினர் ரகுபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ், பொது விநியோக திட்டம் என்பது மக்களுக்கான திட்டம் என்றும், மக்களுக்கு வழங்கவே நிதி உள்ள நிலையில், கால்நடைகளுக்கு தீவனம் வழங்க சாத்தியமில்லை எனவும் கூறினார்.

மேலும் கால் நடைகளுக்கு தீவனம் வழங்க தனித்துறை செயல்பட்டு வருவதாகவும், இதுவரை 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 231 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கால்நடைகளுக்கு தீவனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வைக்கும் இடத்தில், கால்நடைகளுக்கு வழங்கப்படும் அடர் தீவனங்களான புல், வைக்கோல் முதலியவற்றை சேமித்து வைக்க முடியாது என்றும் விளக்கமளித்தார். அதேபோல் பொது விநியோக திட்டத்திலும் எவ்வித சுணக்கமும் இல்லை எனவும் கூறினார்.

Label