OUR CLIENTS
குடிநீர் பிரச்னை சட்டசபையில் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
குடிநீர் பிரச்னை சட்டசபையில் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் Posted on 02-Jul-2019 குடிநீர் பிரச்னை சட்டசபையில் ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்


சென்னை, ஜூலை 2-
தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய ஸ்டாலின் கூறியதாவது:
குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு நீர் ஆதாரமான 4 ஏரிகளும் வறண்டு விட்டன.

2020-ல் சென்னையில் குடிநீர் பிரச்னை ஏற்படும் என்று நிதி ஆயோக் கூறியிருந்தது. ஆனால், 2019- ஆம் ஆண்டிலேயே குடிநீர் பஞ்சம் வந்துவிட்டது. நிதி ஆயோக் அறிக்கையை தமிழக அரசு பொருட் படுத்தவில்லை. தூர்வார் வதற்கான குடிமராமத்து பணிகள் தோல்வி அடைந்து விட்டது.

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவது வரவேற்கத் தக்கது.   இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அமைச்சர் பதில்
எதிர்க்கட்சி ஸ்டாலின் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் கூறியதாவது:
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் கிடையாது, ஆனால் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தப் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல வகையான திட்டங்களை அமல்படுத்த முனைந்து செயல்படுகிறது.

நடப்பாண்டில் தென் மேற்கு பருவ மழை 68% குறைந்திருக்கிறது. ஆனால், தமிழகம் முழுமையும் உள்ள தண்ணீரை ரயில் லாரிகள் மூலம் கொண்டுவந்து சென்னை நகரத்தின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தார்.

Label