OUR CLIENTS
சேலத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் விரைவில் அமையும்
சேலத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் விரைவில் அமையும் Posted on 02-Jul-2019 சேலத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் விரைவில் அமையும்


சேலம், ஜூலை 2-
சேலத்தில் புதிதாக உலக தரமிக்க புற்றுநோய் சிகிச்சை மையம் அமையவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று பேசிய திருவாடனை எம்.எல்.ஏ கருணாஸ், தனது தொகுதியிலுள்ள அரசு மருத்துவமனையின் பிணவரையை புதிதாகக் கட்டித்தந்தால் மட்டுமே தான் அடுத்த முறை வாக்கு சேகரிக்க தொகுதிக்கு செல்ல முடியும் எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், விரைவில் கருணாஸ் குறிப்பிட்ட மருத்துவ மனையின் பிணவரை கிடங்கு சீரமைக்கப்படும் எனவும், அதன் திறப்பு விழாவிற்கு நாமிருவரும் இணைந்து செல்வோம் எனவும் கருணாசை பார்த்துக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ சக்திவேல், சேலம் மாவட்டத்தில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், உலக தரமிக்க புற்றுநோய் சிகிச்சை மையம் சேலத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் கூறினார்.

Label