OUR CLIENTS
தமிழகத்தில் நீலக்கொடி கடற்கரை திட்டம் செயல்படுத்தப்படும்
தமிழகத்தில் நீலக்கொடி கடற்கரை திட்டம் செயல்படுத்தப்படும் Posted on 02-Jul-2019 தமிழகத்தில் நீலக்கொடி கடற்கரை திட்டம் செயல்படுத்தப்படும்


சென்னை, ஜூலை 2-
தமிழகத்தில் நீலக்கொடி கடற்கரை திட்டம் செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகளை மேம்படுத்தும் வகையில், மகாபலிபுரம் கடற்கரையை முன்மாதிரியாக தேர்வு செய்து, நீலக்கொடி கடற்கரை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது, கடற்கரையில் உள்ள இயற்கை வளங்கள், இடங்களை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு கண்காணித்து செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடற்கரை மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label