OUR CLIENTS
சுட்டெரிக்கும் வெயிலால் களை இழந்த பிச்சாவரம்!
சுட்டெரிக்கும் வெயிலால் களை இழந்த பிச்சாவரம்! Posted on 02-Jul-2019 சுட்டெரிக்கும் வெயிலால்  களை இழந்த பிச்சாவரம்!


சிதம்பரம், ஜூலை 2-
 கோடை விடுமுறையில் கடந்த 2 மாதங்களாக களை கட்டியிருந்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கடும் வெயிலால் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் படகு ஓட்டுநர்கள் வேதனையில் உள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தி லிருந்து சுமார் 17 கி.மீ., தொலைவில் கடலோரத்தில் அமைந்துள்ளது அழகிய பிச்சாவரம், சுற்றுலா மையம். இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளன.

 இந்தியாவில் மேற்குவங்கம், ஆந்திரா, ஒடிஸா மாநிலங்களிலும், தமிழகத்தில் பிச்சாவரத்தில் மட்டுமே அரிய வகை சதுப்பு நிலக்காடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தி யான மாங்குரோவ் என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் சுரபுண்ணை செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன. சுரபுண்ணை செடிகள் மருத்துவ குணம் வாய்ந்தவை என கூறப்படுகிறது. கடலோர த்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

அங்கு அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகம் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நடத்தி வருகிறது. சுரபுண்ணை காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று ரசித்து வருகின்றனர். தற்போது வனத்துறையினரும் படகுகளை  இயக்கி வருகி ன்றனர். ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை இப்பகுதிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து கூட்டம், கூட்டமாக பறவைகள் வரும். அப்போது வெளிநாட்டு பறவைகளை கண்டு ரசிக்கவும் முடியும். பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்தில் வனப்பகுதியை ஒரே இடத்தில் இருந்து பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப் பட்டுள்ளது. தினந்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள்  பிச்சாவரத்திற்கு வந்து படகு சவாரி செய்கின்றனர். சொற்ப அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் படகு ஓட்டுநர்கள் போதிய வருமானமின்றி காணப்பட்டனர்.

Label