OUR CLIENTS
அரசு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா - அமைச்சர் உதயகுமார் உறுதி
அரசு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா - அமைச்சர் உதயகுமார் உறுதி Posted on 03-Jul-2019 அரசு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா - அமைச்சர் உதயகுமார் உறுதி

சென்னை, ஜூலை 3-
அரசு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று தெரிவித்தார்.

அரசு நிலங்களில் 5 ஆண்டுக்கு மேல் குடியிருந்தால் வருமான உச்சவரம்பை ஆராய்ந்து தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மாதவரம் தொகுதி திமுக உறுப்பினர் சுதர்சனம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார்,  சோழவரம், நெற்குன்றம், மேட்டு சூரப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள 15 வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கஜா புயல் - வீடு
நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கஜா புயல் நிவாரணம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், கஜா புயல் பாதித்த இடங்களில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும்.  கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

அரசின் 1 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்துக்காக இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து நிலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Label