OUR CLIENTS
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அம்பத்தி ராயுடு திடீர் ஓய்வு...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அம்பத்தி ராயுடு திடீர் ஓய்வு... Posted on 03-Jul-2019 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அம்பத்தி ராயுடு திடீர் ஓய்வு...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 33 வயதாகும் அம்பத்தி ராயுடு இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சேர்க்கப்படவில்லை. இதனையடுத்து அவர் இந்திய அணியின் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

அடுத்தடுத்து தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியதையடுத்து அவர்களுக்கு பதிலாக ரிஷப் பந்த் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்ட விரக்தியில் இருந்த அம்பத்தி ராயுடு, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராயுடு, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. 

Label