OUR CLIENTS
இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் சட்டசபையில் முதல்வர் தகவல்
இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் சட்டசபையில் முதல்வர் தகவல் Posted on 03-Jul-2019 இடஒதுக்கீடு தொடர்பாக  அனைத்துக்கட்சி கூட்டம் சட்டசபையில் முதல்வர் தகவல்


சென்னை, ஜூலை 3-
பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் நீட் தேர்வு, 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது கூறியதாவது;
நீட் தேர்வு தரவரிசைப் பட்டியல் திட்டமிட்ட வகையில்  தாமதப் படுத்தப்பட்டால், இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

முன்னேறிய வகுப் பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழக அரசின் நிலை என்ன என்பதை அரசு விளக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்ய மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் 25 சதவீத இடங்களை உயர்த்திக்கொள்ளலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள கவர்ச்சிச் செய்தியை நம்பி தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது என மு.க.ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் பதில்  எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு பதில் அளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசு இன்னென்ன திட்டத்தின் வாயிலாக இவ்வளவு சீட்டுகள் கொடுக்கிறோம் என்று சொல்லி ஒரு அறிக்கையை எல்லா மாநிலங்களுக்கும் கொடுத் திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்கும் அந்த அறிக்கை வந்திருக்கிறது. அந்த அடிப்படையிலே தான் நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதில் என்னவென்றால், மொத்தம் 1000 இடங்கள் வந்தது என்று சொல்லியிருக்கிறார். அதில் 150 இடங்கள் அகில இந்திய கோட்டா-விற்கு போய்விடுகிறது.  மீதி 850 இருக்கிறது. இந்த 850-ல் 264 ஓப்பன் போட்டி கோட்டா-வுக்கு போய்விடுகிறது.

மீதி 586 இடங்கள், 69 சதவிகித இடஒதுக்கீட்டில் வரும் என்று சொல்கிறார்கள். அந்த 586 இடங்களும் நம்முடைய இடஒதுக்கீட்டின் அடிப் படையிலே மாணவர் களுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்ற கருத்தை அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதைத் தான் அவை யினுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம். இதை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து, என்ன செய்யலாம் என்று   அனைவருடைய கருத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஆகவே, எக்காரணத்தைக் கொண்டும் 69 சதவிகித இடஒதுக்கீட்டையே அரசு தொடர்ந்து கடைப் பிடிக்கும் என்பதை இந்த அவையின் வாயிலாக தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

துணை முதல்வர் பதில்  இதற்கு பதில் அளித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகம் மட்டுமே கடைப்பிடிக்கிறது. 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்கப்படும். இந்த விவகாரத்தில் சமூக நீதிக்கு எந்த பாதிப்பும் வராது.


10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அனைவரும் சேர்ந்து நல்ல முடிவை எடுப்போம் எனக் கூறினார்.

Label