OUR CLIENTS
காட்பாடி தாலுகாவில் புதிய அரசு மருத்துவமனைசட்டசபையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்
காட்பாடி தாலுகாவில் புதிய அரசு மருத்துவமனைசட்டசபையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல் Posted on 03-Jul-2019 காட்பாடி தாலுகாவில்  புதிய அரசு மருத்துவமனைசட்டசபையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்


சென்னை, ஜூலை 3-
காட்பாடி தாலுக்காவில் புதிய அரசு மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நேற்று சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

ஒரு தாலுக்காவுக்கு ஒரு அரசு மருத்துவமனை இருக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. அந்த வகையில் கடந்த கூட்டத்தொடரின் போதே கோரிக்கை வைத்தோம். இந்த கூட்டத்தொடரிலாவது அதற்கான அறிவிப்பு வருமா என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் நேற்று கேள்வி எழுப்பினார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பதிலளித்து பேசினார்.

காட்பாடியில் தாலுக்கா மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை முதல்வர் வழங்கியுள்ளார். இதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என உறுதியளித்தார்.
தமிழ்நாட்டில் 99 சதவீத பிரசவம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் நடைபெறுகிறது.

நாம் மருத்துவ சேவையில் சிறப்பாக செயல்படுவதால், ஆந்திராவில் இருந்து 30 சதவிகிதம் பேர் தமிழகம் வந்து சிகிச்சை பெறுகின்றனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் ஒரு மருத்துவமனையோ அல்லது மருத்துவக்கல்லூரியோ அமைத்து தர முடியுமா என உதகமண்டலம் எம்.எல்.ஏ கணேஷ் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர், நீலகிரியில் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Label