OUR CLIENTS
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைஉச்சநீதிமன்றம் அறிவிப்பு
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைஉச்சநீதிமன்றம் அறிவிப்பு Posted on 03-Jul-2019 ஓபிஎஸ் உள்ளிட்ட  11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைஉச்சநீதிமன்றம் அறிவிப்பு


புதுடெல்லி, ஜூலை 3-
தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேர் எதிராக வாக்களித்தனர். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார். பின்னர் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு, சபாநாயகர் தரப்பு, திமுக மற்றும் தினகரன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி ஓய்வு பெற்றுவிட்டதால் வழக்கு பல நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதாக வழக்கு தொடுத்த தங்க தமிழ்ச் செல்வன் மற்றும் திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

 இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும். மேலும் வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வு உடனடியாக அறிவிக்கப்படும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று அறிவித்துள்ளார்.

Label