OUR CLIENTS
கனமழையால் இடிந்த கல்லூரி சுவர்-6 பேர் பலி
கனமழையால் இடிந்த கல்லூரி சுவர்-6 பேர் பலி Posted on 03-Jul-2019 கனமழையால் இடிந்த கல்லூரி சுவர்-6 பேர் பலி


புனே, ஜூலை 3-
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து புனேவில் உள்ள கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்ததால் 6பேர் பலியாகினர்.

மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.  

மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் 100மிமீ மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில், அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவசர சேவைகள் மட்டும் செயல்படுகின்றன. மேலும் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.  மழை தொடர்பான விபத்துக்களில் இதுவரை 16பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் புனேவின் அம்பேகான் பகுதியில் உள்ள சிங்காத் கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 6பேர் பலியாகியுள்ளனர். 

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார், பேரிடன் மீட்புப் படையினருடன் விரைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   

Label