OUR CLIENTS
துணை நிலை ஆளுநர் அலுவலகம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்
துணை நிலை ஆளுநர் அலுவலகம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம் Posted on 03-Jul-2019 துணை நிலை ஆளுநர் அலுவலகம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்


புதுச்சேரி, ஜூலை 3- 
தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கிரண் பேடி, தமிழக அரசை விமர்சித்தார். மேலும் தமிழக மக்களை சுயநலம் மிக்கவர்கள் என்றும் கோழைகள் என்றும் விமர்சித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தனது கருத்துக்கு கிரண் பேடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி புதுச்சேரி திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்றன. 

துணை நிலை ஆளுநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று புதுச்சேரியை விட்டு கிரண்பேடி வெளியேற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழர்களை கொச்சைப்படுத்தியதற்கு 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆர்ப்பாட்டம் காரணமாக ஆளுநர் மாளிகை செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

Label