OUR CLIENTS
அதிமுகவில் இணைந்தார் அமமுக நிர்வாகி இசக்கி சுப்பையா
அதிமுகவில் இணைந்தார் அமமுக நிர்வாகி இசக்கி சுப்பையா Posted on 03-Jul-2019 அதிமுகவில் இணைந்தார் அமமுக நிர்வாகி இசக்கி சுப்பையா


சென்னை, ஜூலை 3- 
அமமுகவைச் சேர்ந்த இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலகி, முதல்வர் பழனி சாமி முன்னிலையில் சென்னையில் அதிமுகவில் ஜூலை 6ம் தேதி இணைகிறார்.

நாஞ்சில் சம்பத், மைக்கேல் ராயப்பன், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் அடுத்தடுத்து அமமுகவில் இருந்து விலகி அதிமுக, திமுகவில் இணைந் துள்ள நிலையில், அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளும் விரைவில் விலகுவார்கள் என  தகவல்கள் வெளி யானது.

அமமுகவின் கட்சியின் மிக முக்கிய நிர்வாகி, தினகரனின் நெருங்கிய நண்பர், அமமுகவின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து வந்தவர் இசக்கி சுப்பையா. சென்னை அசோக் நகரில் உள்ள இவரது இடத்தில் தான் அமமுகவின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். அமமுகவில் இருந்து இசக்கி சுப்பையா விலக போகிறார் என்று தகவல் வெளியானது.

இதைப் பற்றி செய்தி யாளர்கள் கேட்டதற்கு, அதாவது தனது அரசியல் ரீதியான முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று  இசக்கி சுப்பையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

டிடிவி.தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது.  தினகரன்  என்னைக் கிண்டல் செய்தார். இது ஒரு தலை வருக்கு அழகல்ல. டிடிவி பதற்றத்தில் இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தவன் நான். டிடிவி தினகரனே தொண்டர் களால் அடையாளம் காட்டப் பட்டவர்தான்.

ஜூலை 6-ந்தேதி அதிமுகவில் 20,000 தொண்டர் களுடன் இணைகிறேன். மக்களின் முதல்வராக பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம்.  சுயநலம் பார்ப்பதாக இருந்தால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதாவில் சேர்ந்து இருப்பேன். இவ்வாறு இசக்கி சுப்பையா  கூறினார்.

Label