OUR CLIENTS
படிக்கும் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்குவதில் முன்னுரிமை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
படிக்கும் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்குவதில் முன்னுரிமை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் Posted on 03-Jul-2019 படிக்கும் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்குவதில் முன்னுரிமை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


சென்னை, ஜூலை 3-
மடிக்கணினி வழங்குவதில் தற்போது படிக்கும் மாணவ-மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சட்டசபையில் நேற்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது மடிக்கணினி கேட்டு மாணவ- மாணவிகள் பல்வேறு பள்ளிகளில் போராட்டம் நடத்துவது குறித்து உறுப்பினர் கேட்டார். இதற்கு பதில் அளித்து  அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது தற்போதைய பாடத் திட்டத்தின்படி கணினிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே பிளஸ்-1, பிளஸ்-2 படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி தேவைப்படுகிறது.  

எனவே மடிக்கணினி வழங்கு வதில் அவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது. ஏற்கனவே பிளஸ்-2 முடித்தவர்களுக்கு பின்னர் மடிக்கணினி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Label