OUR CLIENTS
குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுக-ஹெச்.ராஜா
குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுக-ஹெச்.ராஜா Posted on 03-Jul-2019 குடிநீர் பற்றாக்குறைக்கு  காரணம் திமுக-ஹெச்.ராஜா


சென்னை, ஜூலை 3-
திமுகவின் பொறுப்பற்ற ஆட்சியே குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுக தான் என்றும், திமுகவின் பொறுப்பற்ற ஆட்சியால் சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  நீர்நிலையின் மீது கட்டப்பட்டிருப்பது வெட்கக்கேடு என குறிப்பிட்டுள்ளார்.  

குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் திமுக 67ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொடுத்துள்ள பொறுப்பற்ற ஆட்சியே காரணம். சென்னை மற்றுமல்ல தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் அழிப்பு. மதுரையில் உயர்நீதிமன்ற கிளை நீர்நிலையின் மீது. வெட்கக்கேடு. மேலும், காளை, எருதுகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்த்தது திமுக ஆட்சியில் தான் என்றும், நெடுவாசல், மீத்தேன், நீட், காவிரியில் கர்நாடகா அணை கட்டியது, கச்சத் தீவை தார வார்த்தது இவை அனைத்தும் திமுக - காங்கிரஸ் ஆட்சியில் தான் என்றும் குறிப்பிட்ட அவர், நேற்று கோரிக்கை போராட்ட வேஷம் நடத்துவதா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

Label