OUR CLIENTS
கல்வராயன் மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை
கல்வராயன் மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை Posted on 03-Jul-2019 கல்வராயன் மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை


விழுப்புரம், ஜூலை 3-
விழுப்புரம்  கல்வ ராயன் மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளை சுற்றுலாத்தலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி மலைக்கோட்டை மட்டுமே சுற்றுலாத் தலமாக உள்ளதாகவும், சுற்றுலாத்தலங்களை அதிகரிக்கும் வகையில், கல்வராயன் மலை பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகளை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கல்வராயன் மலை பகுதியில் உள்ள சுறுகுலூர் சேராப்பட்டு நீர்வீழ்ச்சி, கொடுவந்துறை மேகம் நீர்வீழ்ச்சி உள்ளிட்டவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார். 

அவற்றை காப்புக்காடாக பராமரித்து வருவதாகவும், அந்த நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதைகள் கரடுமுரடாகவும், வழுக்கு பாறைகள் அதிகமாக உள்ளதாகவும் கூறினார். எனவே வனத்துறையிடம் கலந்து ஆலோசித்து, நிதிநிலைமைக்கு ஏற்ப அந்த நீர்வீழ்ச்சிகளை சுற்றுலாத்தலமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.

Label