OUR CLIENTS
இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது அமைச்சர் செங்கோட்டையன்
இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது அமைச்சர் செங்கோட்டையன் Posted on 03-Jul-2019 இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது அமைச்சர் செங்கோட்டையன்


சென்னை, ஜூலை 3-
தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், அது குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுமா என தி.மு.க. உறுப்பினர் சுரேஷ்ராஜன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டால், ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாறும்போது மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கலந்தாய்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப் படாது என்பதால் அரசு இந்த முடிவை எடுத்து செயல்படுத்திவருவதாக அவர் கூறினார்.

பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழ் ஆங்கிலம் தவிர்த்து மூன்றாம் மொழியை கற்பது மாணவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றார். இது குறித்து கடந்த மாதம் 26-ஆம் தேதி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.

Label