OUR CLIENTS
இந்தியா-பாகிஸ்தான் சிறை கைதிகள் பட்டியல் பரிமாற்றம்
இந்தியா-பாகிஸ்தான் சிறை கைதிகள் பட்டியல் பரிமாற்றம் Posted on 03-Jul-2019 இந்தியா-பாகிஸ்தான் சிறை கைதிகள் பட்டியல் பரிமாற்றம்


இஸ்லாமாபாத், ஜூலை 3-
இந்தியா மற்றும் பாகிஸ்தான் சிறைகளில் அடைத்து வைக்கபட்டுள்ள 616 கைதிகளின் பட்டியலை இருநாட்டு தூதரகங்களும் நேற்று பரிமாறிக் கொண்டன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில்  21-.5-.2008 அன்று செய்துகொண்ட தூதரக அணுகுமுறை ஒப்பந்தத்தின் விதிகளின்படி, ஆண்டுதோறும் ஜனவரி1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில்  இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தங்கள் நாட்டு சிறைகளில் அடைத்து வைக்கபட்டுள்ள கைதிகளின் பட்டியலை பரிமாறிக்கொள்ள வேண்டும் .

அவ்வகையில், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 261 இந்திய கைதிகளின் பட்டியலை  இந்திய தூதரகத்திடம் நேற்று அளிக்கப்பட்டது. இவர்களில் 52 பேர் குற்றச்செயல்கள் மற்றும் எல்லை தாண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதி 209 பேர் மீனவர்கள் ஆவர்.  இதேபோல் இந்திய சிறைகளில் உள்ள 355 பாகிஸ்தான் கைதிகளின் பட்டியலை புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்திய அரசு அளித்தது. இவர்களில் 256 பேர் குற்றச்செயல்கள் மற்றும் எல்லை தாண்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்  99 பேர் மீனவர்கள் ஆவர். 

Label