OUR CLIENTS
அரசு பள்ளிக்கு பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் எடுத்து வரும் மாணவர்கள்!
அரசு பள்ளிக்கு பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் எடுத்து வரும் மாணவர்கள்! Posted on 03-Jul-2019 அரசு பள்ளிக்கு பிளாஸ்டிக் குடங்களில்  தண்ணீர் எடுத்து வரும் மாணவர்கள்!


வேலூர், ஜூலை 3-
திருப்பத்தூர் அருகே மாணவிகள் தாங்கள் படிக்கும் அரசு பள்ளிக்கு தேவையான தண்ணீரை குடங்களில் எடுத்துச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை அருகே ஆவல்நாயக்கன்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். ஆனால் தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை 11 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். 

1ம் வகுப்பில் 3பேர், 2ம் வகுப்பில் ஒருவர், 3ம் வகுப்பில் 3பேர், 4ம் வகுப்பில் 2பேர், 5ம் வகுப்பில் 2 பேர் என மொத்தம் 11 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்தான், இந்த அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்துகிறார். இதனால் இங்கிருந்த ஒரு மாணவி கடந்த மாதம் தனியார் பள்ளிக்கு சென்றுவிட்டதால் தற்போது 10 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.ஆனால் 10 மாணவர்களுக்கே இப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லை. பள்ளியில் தங்களுக்கு தேவையான தண்ணீரை மாணவிகளே வீட்டில் இருந்து குடங்களில் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். மேலும் பள்ளியில் அடிப்படை வசதிகளும் இல்லை. 

இதனால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இந்த அரசு பள்ளி மூடப்படும் அபாயத்தில் உள்ளது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுத்து மூடுவிழாவில் இருந்து மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label