OUR CLIENTS
ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் முகாம்!
ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் முகாம்! Posted on 03-Jul-2019 ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் முகாம்!


வேலூர், ஜூலை 3-
வேலூரில் ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் நேற்று நடந்தது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்ப படிவம் பெறப்பட்டது. இதையடுத்து பிற்பகல் 3 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த அடையாள அட்டைகள் வழங்கும் முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் மலர்விழி- முடநீக்கியல் தொழில்நுட்ப அலுவலர் ஜோதிலிங்கம் - மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டு அடையாள அட்டைகளை பெற்றனர். 

Label