OUR CLIENTS
அரசு பள்ளி அருகே குவிந்து கிடக்கும் இறைச்சிக்கழிவுகள்!
அரசு பள்ளி அருகே குவிந்து கிடக்கும் இறைச்சிக்கழிவுகள்! Posted on 03-Jul-2019 அரசு பள்ளி அருகே குவிந்து கிடக்கும் இறைச்சிக்கழிவுகள்!


பொள்ளாச்சி, ஜூலை 3-
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளி என அடுத்தடுத்து இரண்டு பள்ளிகள் உள்ளன. மேலும், அந்த பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் மாணவர் விடுதியும் செயல்படுகிறது.

இங்கு வெளியூர் மாணவர்கள் பலர் தங்கி படிக்கின்றனர்.ஆனால் இந்த மாணவர் விடுதியை சுற்றிலும் சுவர் இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது. இதனால், இரவு நேரத்தில் பல்வேறு பகுதியிலிருந்து சரக்கு வாகனங்களில் கொண்டுவரப்படும் இறைச்சிக்கழிவுகளை பள்ளி மாணவர் விடுதியருகே கொட்டி செல்வதை தொடர்ந்துள்ளனர். 

இரவு நேரத்தில் இறைச்சிக்கழிவுகளை கொட்டி சென்றவுடன் காலை முதல், அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அதை ஆங்காங்கே சிதறி போட்டு செல்கிறது. இப்படி தினமும், பள்ளியருகே இறைச்சிக்கழிவுகளை கொட்டி செல்வதால், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். இதனை பேரூராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பள்ளியருகே இறைச்சிக்கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும், அதனை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label