OUR CLIENTS
விவசாயிகளுக்கு தட்கல் முறை 11,000 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கல்
விவசாயிகளுக்கு தட்கல் முறை 11,000 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கல் Posted on 03-Jul-2019 விவசாயிகளுக்கு தட்கல் முறை  11,000 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கல்


புதுடெல்லி, ஜூலை 3-
விவசாயிகளுக்கு இந்த ஆண்டு 11 ஆயிரம் மின் இணைப்புகள் தட்கல் முறையில் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதா? என கேள்வி எழுப்பிய தி.மு.க. உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இதுவரை எவ்வளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டு எத்தனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன? எனவும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, கடந்த ஆண்டுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 ஆயிரம் இணைப்புகள் என நிர்ணயிக்கப்பட்டு 19 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப் பட்டதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு கஜா புயல் காரணமாக தட்கல் முறையில் மின் இணைப்புகள் வழங்க முடியவில்லை என்ற அவர், இந்த ஆண்டுக்கான பத்தாயிரம் மின் இணைப்புகள், மற்றும் கடந்த ஆண்டுகளில் மீதமுள்ள ஆயிரம் இணைப்புகள் என மொத்தமாக இந்த ஆண்டு 11 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு தட்கல் முறையில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Label