OUR CLIENTS
அறந்தாங்கி எம்.எல்.ஏ. முதல்வருடன் திடீர் சந்திப்பு
அறந்தாங்கி எம்.எல்.ஏ. முதல்வருடன் திடீர் சந்திப்பு Posted on 03-Jul-2019 அறந்தாங்கி எம்.எல்.ஏ.  முதல்வருடன் திடீர் சந்திப்பு


சென்னை, ஜூலை 3
அதிமுக அதிருப்தி எம்எல்ஏவான ரத்தினசபாபதி நேற்று மாலை முதல்வர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். இவர்களின் சந்திப்பு டிடிவி தினகரன் அணி மேலும் சரிவதை உறுதி செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியிலிருந்து அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரத்தினசபாபதி. அதிமுக - அமமுக இடையேயான பிரச்னையில் இவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 22 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது அமமுக 1 தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து இதுவரை டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள் வேறு முகாம்களுக்கு இடம் மாறத் துவங்கினர். முதலில் செந்தில் பாலாஜி விலகினார். அரவக்குறிச்சியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏவாகியிருக்கிறார். அடுத்ததாக தங்க தமிழ்செல்வன் திமுகவில் சேர்ந்தார். (தேனி தொகுதியில் மக்களவை உறுப்பினராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்).

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றவரும், அமமுக அமைப்புச் செயலாளராக இருந்தவருமான இசக்கி சுப்பையா வரும் 6-ம் தேதி அதிமுகவில் சேரப்போவதாக நேற்று காலை அறிவித்தார். அதிமுக அதிருப்தி எம்எல்ஏவான ரத்தினசபாபதி நேற்று  மாலை முதல்வர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். இதையடுத்து அவர் சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலையும் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உடனிருந்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து எம்எல்ஏ ரத்தினசபாபதி பேட்டியளித்தார். டிடிவி. தினகரனுக்குஆதரவாக செயல் பட்டதன் காரணமாக, அதிமுக கொறடா ராஜேந்திரன் வேண்டு கோளின்படி கடந்த மே மாதம் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 3 அதிமுக எம்எல்ஏகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பதும், அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பின், சபாநாயகர் ஆணைக்கு தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Label