OUR CLIENTS
காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்!
காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்! Posted on 03-Jul-2019 காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்!


பூவிருந்தவல்லி, ஜூலை 3-
மப்பேடு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வீணாகி வருகின்றன.

கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், வழிப்பறி, விபத்து போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதில் இருசக்கர வாகனங்களே அதிக அளவில் உள்ளன. இவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்கள் பாதுகாப்பில்லாமல் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறையாக பராமரித்து வழக்குகள் முடிந்த பின் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்ட இந்த வாகனங்கள் மிகவும் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இதேபோல் மணவாள நகர் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் மப்பேடு காவல் நிலையத்தில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்களை உரியவர் களிடம் ஒப்படைக்கவோ அல்லது ஏலம் விடவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label