OUR CLIENTS
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் கோட்டைக்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் கோட்டைக்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு! Posted on 03-Jul-2019 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர்  கோட்டைக்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு!


வேலூர், ஜூலை 3-
வேலூர் கோட்டையை அழகுபடுத்த 33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் கோட்டையை அழகுபடுத்த 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டை அகழி தூர்வாரப்பட்டு படகு சவாரி விடப்படும். கோட்டை சுற்றுச்சுவர் கோட்டையில் உள்ள பழமையான அரண்மனைகள் புதுப்பிக்கப்படும். கோட்டை பூங்கா புதுப்பிக்கப்பட்டு சிறுவர்களுக்கான ரயில் விடப்படும். கோட்டையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க பேட்டரி கார், கோட்டை வரலாறு குறித்த ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி, இரவில் அலங்கார மின்விளக்குகள் என 50க்கும் மேற்பட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு அழகுபடுத்தப்படும். வேலூர் சதுப்பேரியில் உள்ள குப்பையை அகற்ற 13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Label