OUR CLIENTS
பல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி!
பல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி! Posted on 03-Jul-2019 பல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி!


திருவள்ளூர், ஜூலை 3-
குண்டும், குழியுமான ஒன்றிய சாலையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்டது கீழச்சேரி ஊராட்சி. இங்கிருந்து பள்ளகாலனி வழியாக பேரம்பாக்கம் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. இந்த சாலையில் 3 கி.மீ., தூரத்திற்கு சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில தினங்களாக மழை பெய்ததால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் குண்டும், குழியுமான ஒன்றிய சாலையை சீரமைக்கவும் சாலையோர முட்புதர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label