OUR CLIENTS
ரௌடிகளுடன் பிறந்த நாள் விழா உதவி ஆய்வாளரிடம் விசாரணை!
ரௌடிகளுடன் பிறந்த நாள் விழா உதவி ஆய்வாளரிடம் விசாரணை! Posted on 03-Jul-2019 ரௌடிகளுடன் பிறந்த நாள் விழா உதவி ஆய்வாளரிடம் விசாரணை!

வேலூர், ஜூலை 3-
ரௌடிகளுடன் பிறந்த நாள் விழா கொண்டாடிய உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 
வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் செல்வராஜ்(50). குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதாக வந்த புகார்களின்படி ஏப்ரலில் குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

அங்கும், கள்ளச்சாராய மாமூல் வேட்டையில் ஈடுபட்டு வந்ததாக அவர் மீது புகார்கள் வந்தன. இந்நிலையில் மே 3ல் செல்வராஜ் தன் பிறந்த நாளை வேலூர் ஆயுதப்படை குடியிருப்புக்கு செல்லும் சாலையில் கொண்டாடி உள்ளார். 

அதில் ரௌடிகள் பலர் பங்கேற்று பரிசுகள் அளித்துள்ளனர். அவர்கள் செல்வராஜுக்கு கேக் ஊட்டினர். செல்வராஜ் அவர்களுக்கு மதுவுடன் பிரியாணி விருந்து வைத்துள்ளார். 
இதில் எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலை தளங்களில் பரவின. இதையடுத்து செல்வராஜ் மீது துறை ரீதியான விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.  10 பேர் அடங்கிய போலீஸ் அதிகாரிகள் செல்வராஜிடம் நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தினர்.

Label