OUR CLIENTS
தமிழகத்தில் 1,49,000 கி.மீ., தொலைவுக்கு ஊரக சாலைகள்
தமிழகத்தில் 1,49,000 கி.மீ., தொலைவுக்கு ஊரக சாலைகள் Posted on 02-Jul-2019 தமிழகத்தில் 1,49,000 கி.மீ., தொலைவுக்கு ஊரக சாலைகள்


சென்னை, ஜூலை 4-
நபார்டு திட்டத்தின் கீழ், சாலைகள் அமைப்பதற்கு அதிக நிதி பெற்று அதனை செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய மயிலாடுதுறை அதிமுக எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், தங்கள் தொகுதியில் ஊரக சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரக பகுதிகளில் சாலை அமைப்பதற்கு அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில், ஒரு லட்சத்து 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு இருந்த ஊரக சாலை தற்போது ஒரு லட்சத்து 49 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்திருப்பதாக கூறினார்.

அதேபோல பேரூராட்சிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 315 கோடி ரூபாயில் ஆயிரத்து 983 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் மத்திய அரசின் நபார்டு திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே சாலை அமைப்பதற்கு அதிக நிதி பெற்று அதனை செயல்படுத்தும் மாநிலம் தமிழகம் என்று வேலுமணி குறிப்பிட்டார். 

Label