OUR CLIENTS
முன் அனுமதி பெறாமல் சாலைகளை தோண்டுவதால் திடீர் மின்வெட்டு
முன் அனுமதி பெறாமல் சாலைகளை தோண்டுவதால் திடீர் மின்வெட்டு Posted on 04-Jul-2019 முன் அனுமதி பெறாமல் சாலைகளை தோண்டுவதால் திடீர் மின்வெட்டு


சென்னை, ஜூலை 4-
மின்சாரத் துறையிடம் முறையான முன் அனுமதி பெறாமல் மற்ற துறை ஊழியர்கள் சாலைகளை தோண்டுவதால், சில இடங்களில் திடீர் மின்வெட்டு ஏற்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டபேரையில் கேள்வி நேரத்தில் பேசிய திருவெற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ., சாமி, கடந்த 10 நாட்களாக தொடந்து தனது தொகுதியில் 4 முதல் 5 மணி நேரம் வரை மின் வெட்டு ஏற்படுவதாகவும் அதற்கு 20 ஆண்டுகள் பழமையான மின்கம்பிகள் மாற்றப் படாததே காரணம் என்றும் இதை மாற்றி அமைத்து தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, திருவெற்றியூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை மண்டலம், மின் மாற்றிகளில் படிந்து அதனால் பழுது ஏற்பட்டு சில இடங்களில் மின் இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டது என்றும் அது தற்போது சரி செய்யப்பட்டு மின் இணைப்பு சீர் செய்யப் பட்டுள்ளாது எனவும் கூறினார்.

மேலும் பழைய மின் கம்பிகளை மாற்றி அமைப்பது தொடர்பாக இன்று மின் துறை மானிய கோரிக்கையில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சாலை அமைப்பது உட்பட பல்வேறு பணிகளுக்காக மற்ற துறையை சேர்ந்த ஊழியர்கள் மின்சாரத் துறைக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல் தோண்டும் குழிகளால் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் நிலை ஏற்படுகிறது என்றும் இது தொடர்பாக மற்ற துறை ஊழியர் களுக்கும் அறிவுருத்தப் பட்டுள்ள தாகவும் கூறினார்.

Label