OUR CLIENTS
முதல்வர் பேசுவதை கேட்டு ஆச்சரியமடைந்த துரைமுருகன்
முதல்வர் பேசுவதை கேட்டு ஆச்சரியமடைந்த துரைமுருகன் Posted on 04-Jul-2019 முதல்வர் பேசுவதை கேட்டு ஆச்சரியமடைந்த துரைமுருகன்


சென்னை, ஜூலை 4-
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசுவதை கேட்டு ஆச்சரியப்பட்டதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிவுற்றதாக சபாநாயகர் அறிவித்தார். 

அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், இதற்கு முன் கேள்வி நேரத்தில் காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை தொடர்பான கேள்விகள் கட்டாயம் இடம் பெறும் என்றும் ஆனால் நீண்ட காலமாக இந்த துறைகளில் கேள்விகள் வருவதில்லை என்றும் கூறினார்.

முதல்வர் ஒன்றும் பதில் சொல்ல முடியாதவர் அல்ல என்றும் முதல்வர் பதிலளிப்பதை பார்த்து தான் பலமுறை அசந்து போய் இருப்பதாகக் கூறினார். முதல்வரின் துறை தொடர்பான கேள்விகள் கேள்வி நேரத்தில் இடம்பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளதாகவும், அவரது துறை தொடர்பாக கேள்விகளும் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

Label