OUR CLIENTS
தான் படித்த பள்ளியின் மேடையில் மண்டியிட்டு வணங்கிய அமைச்சர்
தான் படித்த பள்ளியின் மேடையில் மண்டியிட்டு வணங்கிய அமைச்சர் Posted on 04-Jul-2019 தான் படித்த பள்ளியின் மேடையில் மண்டியிட்டு வணங்கிய அமைச்சர்


சென்னை, ஜூலை 4-
 ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை அதிமுக விரைவில் அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி, முருக தனுஷ்கோடி மகளிர் மேல்நிலை பள்ளி, பி.ஏ. கே பழனிச்சாமி பள்ளி ஆகிய மூன்று பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

கே.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி தான் படித்த பள்ளி என்பதால் அவர் மேடையில் மண்டியிட்டு வணங்கினார். மேடையில் பேசும் பொழுது மாணவர் களிடையே சில கேள்விகளைக் கேட்ட அமைச்சர் ஜெயக்குமார் சரியான பதில் கூறிய மாணவர்களுக்கு 500 ரூபாய் பரிசு வழங்கினார்.  பின்னர் தான் பயின்ற வகுப்பறைக்கு சென்ற அவர், மாணவர்களோடு கலந்துரையாடினார். பின்னர் கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

 செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். 

தனி மரம் தோப்பாகாது என்ற நிலையில் தினகரன் இருப்பதாக அவர் கூறினார்.

Label