OUR CLIENTS
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில்
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் Posted on 04-Jul-2019 கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில்


சென்னை, ஜூலை 4-
கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரி வித்துள்ளார்.

சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, கஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்ற தமிழக அரசு அறிவிப்பின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், வீடுகள் கட்டித்தருவதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்தார். இத்திட்டத்தை செயல் படுத்த மூத்த ஐஏஎஸ்  அதிகாரிகள் மூன்று பேர் நியமிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து நிலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Label