OUR CLIENTS
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம்
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம் Posted on 04-Jul-2019 பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடக்கம்




சென்னை, ஜூலை 4-
பொதுப்பிரிவு மாணவர்களுக் கான ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு தொடங்கி யுள்ளது.

விளையாட்டுப் பிரிவு மாற்றுத் திறனாளி மாணவர்கள் படை வீரர்களின் வாரிசுகள் உள்ளிட் டோருக் கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் பொதுப் பிரிவினருக் கான கலந்தாய்வு நேற்று ஆன்லைனில் தொடங்கி யுள்ளது.  கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெறும் நிலையில் முதற்கட்ட கலந்தாய்வில் 178 முதல் 200 வரை கட் - ஆப் மதிப் பெண்கள் பெற்ற 9,500 பேர் பங்கேற்றுள்ளனர். 

மாணவர்கள் வீட்டில் இருந்தும், தமிழகம் முழுவதும் 46 உதவி மையங்களுக்கு நேரில் சென்றும் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஷ்ஷ்ஷ்.tஸீமீணீஷீஸீறீவீஸீமீ.வீஸீ என்ற இணையதளம் மூலம்  கலந்தாய்வில் பங்கேற்று மாணவர்கள் பதிவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

முதல்சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ள மாணவர்கள் நேற்று முதல் ஜூலை 10-க்குள் பதிவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 8 முதல் 10-ஆம் தேதிக்குள் விருப்பக் கல்லூரிகள், விருப்பப் பாடப் பிரிவுகளை இணைய தளத்தில் உள்ள சிலீஷீவீநீமீ லிவீst-ல் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஜுலை 11 முதல் 12-ஆம் தேதிக்குள் பதிவு செய்த விருப்பக் கல்லூரி, பாடப்பிரிவு பட்டியலில் இருந்து படிக்கப்போகும் கல்லூரி, பாடப்பிரிவை உறுதிப் படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

ஜூலை 13-ஆம் தேதி முதல் சுற்று மாணவர்களுக் கான இறுதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு தொழில் நுட்பக்கல்வி இயக்ககத்தால் வெளியிடப்படும்.

Label