OUR CLIENTS
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு Posted on 04-Jul-2019 கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு


வேப்பேரி, ஜூலை 4
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

ஆன்லைன் மூலமாக கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு மே மாதம் 8 முதல் ஜூன் 17 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

பி.வி.எஸ்.சி. எனப்படும் கால்நடை அறிவியல் இளங்கலைப் படிப்புகளுக்கு 14 ஆயிரத்து 695 பேர், பி.டெக் உணவு தொழில் நுட்பப் படிப்புகளுக்கு 2 ஆயிரத்து 427 பேர் என மொத்தம் 17 ஆயிரத்து 122 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் தரவரிசை பட்டியலை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் வெளியிட்டார். 

பி.வி.எஸ்.சி படிப்புக்கான தரவரிசை பட்டியலில் 200க்கு 199 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்த தருமபுரியைச் சேர்ந்த சுவாதி தூத்துக்குடியைச் சேர்ந்த ஜேன்சில்வியா, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஹர்ஷா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். 

Label