OUR CLIENTS
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்! Posted on 04-Jul-2019 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!


திருத்தணி, ஜூலை 4-
மாநில நெடுஞ்சாலை மற்றும் கால்வாய்யை ஆக்கிரமித்து கட்டிய கடைகள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

திருத்தணி - சிதூர் மாநில நெடுஞ்சாலை மேல்திருத்தணி பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் 700 மீட்டர் தொலைவு மழைநீர் வடிகால் கால்வாய் கட்டுவதற்கு தீர்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நெடுஞ்சாலை மற்றும் வடிகால் கால்வாய்யை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். 

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜே.சி.பி., இயந்திரத்துடன் சென்று ஆக்கிரமித்துள்ள கடைகளை இடித்து அகற்றினர். அதை தொடர்ந்து கால்வாய் கட்டுவதற்கு இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Label