OUR CLIENTS
கொசஸ்தலை ஆற்றில் குப்பை குவியல்!
கொசஸ்தலை ஆற்றில் குப்பை குவியல்! Posted on 04-Jul-2019 கொசஸ்தலை ஆற்றில் குப்பை குவியல்!


திருவள்ளூர், ஜூலை 4-
கொசஸ்தலை ஆற்றில், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருவது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சோழவரம் அடுத்த காரனோடை, ஜனப்பசத்திரம் பகுதிகள் வழியாக செல்லும் கொசஸ்தலை ஆற்றில் குடியிருப்புகளின் குப்பை கழிவு கொட்டி குவிக்கப்பட்டு வருகிறது. பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளால் ஆறு மாசு அடைகிறது. இறைச்சி கடைகளின் கழிவுகளும் கொட்டி குவிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஆற்றில் நீர் வரத்து காலங்களில் நிலத்தடி நீரை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.

காரனோடை, அழிஞ்சி வாக்கம், பண்டிக்காவனூர் ஆகிய ஊராட்சிகள் குடி யிருப்புகள் மற்றும் கடைகளில் சேகரிக்கும் கழிவுகளை முறையாக கையாளாமல், ஊராட்சி நிர்வாகங்கள், ஆற்றில் கொட்டி குவித்து வருகின்றன. கண்துடைப்பிற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட குடில்களும் பயனற்று கிடக்கின்றன. கொசஸ்தலை ஆற்றில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Label