OUR CLIENTS
சேலத்தில் இளம்பெண் பலி ஆர்.டி.ஓ., விசாரிக்க மறியல்!
சேலத்தில் இளம்பெண் பலி ஆர்.டி.ஓ., விசாரிக்க மறியல்! Posted on 04-Jul-2019 சேலத்தில் இளம்பெண் பலி ஆர்.டி.ஓ., விசாரிக்க மறியல்!


சேலம், ஜூலை 4-
இளம்பெண் மரணம் குறித்து ஆர்.டி.ஓ., முறையாக விசாரிக்க வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் அடுத்த உத்தமசோழபுரம், ஆதிதிராவிடர் காலனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார்(28). தச்சு தொழிலாளி. இவரது மனைவி செல்வி(23). இருவருக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 11 மாத ஆண் குழந்தை உள்ளது. சுரேஷ்குமார் அடிக்கடி குடித்து விட்டு மனைவியுடன் ரகளை செய்துள்ளார். அந்த வேதனையில் நேற்று முன்தினம் செல்வி வீட்டில் விஷபவுடர் குடித்து மயங்கி விழுந்தார். 

அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் மல்லிகா(55), போலீசில் புகார் அளித்தார். நேற்று பிரேத பரிசோதனைக்கு பின் உடலை வாங்க மறுத்தனர். மருத்துவமனை முன்பாக தரையில் அமர்ந்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.டி.ஓ., சரிவர விசாரிக்கவில்லை என குற்றம்சாட்டி செல்வி சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்படி தாய் மல்லிகா உள்ளிட்ட ஐவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உடலை வாங்கிச் சென்றனர். இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

Label