OUR CLIENTS
தண்ணீர் வசதி இல்லாததால் வீணாகும் கழிப்பறை!
தண்ணீர் வசதி இல்லாததால் வீணாகும் கழிப்பறை! Posted on 04-Jul-2019 தண்ணீர் வசதி இல்லாததால் வீணாகும் கழிப்பறை!


காஞ்சிபுரம், ஜூலை 4- 
காஞ்சிபுரம் கண்ணகிபுரத்தில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறை குழாயில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சி, 46வது வார்டு, கண்ணகிபுரத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன் 8.50 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய பொது கழிப்பறை கட்டப்பட்டது. 

இப்பகுதிவாசிகளுக்கு கழிப்பறை மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்த நிலையில் கழிப்பறை குழாயில் தண்ணீர் வராததால் பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர். இதனால் கழிப்பறையை சுற்றிலும் புதர்கள் மண்டியுள்ளன லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறை வீணாகி வருகிறது. எனவே கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்துவதோடு கழிப்பறைக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label