OUR CLIENTS
மக்களை ஏமாற்றவே தண்ணீர் போராட்டம் நடத்துகிறார் ஸ்டாலின்வானதி சீனிவாசன்
மக்களை ஏமாற்றவே தண்ணீர் போராட்டம் நடத்துகிறார் ஸ்டாலின்வானதி சீனிவாசன் Posted on 04-Jul-2019 மக்களை ஏமாற்றவே தண்ணீர்  போராட்டம் நடத்துகிறார் ஸ்டாலின்வானதி சீனிவாசன்


கோயம்புத்தூர், ஜூலை 4-
மக்களை ஏமாற்றுவதற்காகவே காலி குடங்களை வைத்து கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். 

கோயம்புத்தூரியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவில்  உறுப்பினர் சேர்க்கைக்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கட்சியில் சேர விரும்புவோர்  8980808080 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து உறுப்பினராக இணைந்துக்கொள்ளும் வகையிலான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த முறை நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்க்கையில் 40 லட்சம் பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வரும் 6ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.  மத்திய, மாநில அரசுகள் மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படாது எனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்தாது என்றும் திட்டவட்டமாக கூறினார். 

மக்களை ஏமாற்று வதற்காகவே  காலி குடங்களை வைத்து கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார் என்று குற்றம்சாட்டிய அவர், எத்தனை நீர்நிலைகள் திமுக ஆட்சியில்  தூர்வாரப்பட்டன என்பதை ஸ்டாலின் அறிக்கையாக அளிக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

தண்ணீர் பிரச்சனை யிலும் திமுக இரட்டை வேடம் போடுவதாக தெரிவித்த வானதி சீனிவாசன், காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் கட்சி என்றும், பாஜக தனி ஒரு நபருக்கோ, குடும்பத்திற்கோ சொந்தமான கட்சி அல்ல என்றும் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Label