OUR CLIENTS
16 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்&அமைச்சர் காமராஜ்
16 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்&அமைச்சர் காமராஜ் Posted on 04-Jul-2019 16 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்&அமைச்சர் காமராஜ்


சென்னை, ஜூலை 4-
நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற உணவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் காமராஜ், டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில், வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்த கட்டிடங்கள் கட்டி தரப்படும் என்று அறிவித்தார்.

முதியோர் ஓய்வூதியம் மற்றும் அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ் உள்ள 4 லட்சத்து 30 ஆயிரத்து 465 பயனாளிகளுக்கு 48.51 லட்சம் மதிப்பீட்டில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கிடங்குகள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் தானியங்களை பாதுகாப்பாக சேமிப்பதற்கும், காற்றோட்டமான வசதி அமைத்துதரும் வகையிலும் 8 கோடி மதிப்பீட்டில் இடைச்செருகு கட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்பன உள்ளிட்ட 16 புதிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.

Label