OUR CLIENTS
விவசாயிகளுக்கான தானிய ஈட்டுக் கடன் வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு
விவசாயிகளுக்கான தானிய ஈட்டுக் கடன் வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு Posted on 04-Jul-2019 விவசாயிகளுக்கான தானிய ஈட்டுக்  கடன் வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு


சென்னை, ஜூலை 4-
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக் கடன் உச்சவரம்பு 10லட்சம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு 15புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

அதில், கூட்டுறவு நிறுவனங்களில் தனிநபர் நகை கடனளவு 10லட்சத்தில் இருந்து 20லட்சமாக உயர்த்தப்படும் என்றும்.

கிராமப்புற மக்கள் பயன்படும் வகையில், தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிகளில் 57.36 இலட்சத்தில் மைக்ரோ ஏடி.எம். இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும், திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் நிலையம் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், விவசாயிகள், வேளாண் விளைபொருட்களை இருப்பு வைத்து லாபகரமான விலையில் விற்று பயனடையும் நோக்கத்துடன் வழங்கப்படும் தானிய ஈட்டுக் கடனின் உச்சவரம்பு 3லட்சத்தில் இருந்து 10லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Label